
கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மேதகு நய்யர் நசீர் ஹிலால்-இ-இம்தியாஸ் (இராணுவம்) அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, ஏப்ரல் 20 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, ஏப்ரல் 20






