Ministry News
சித்திரவதை தடுப்புக்கான ஐக்கிய நாடுகளின் துணைக்குழு இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் நிறைவு
வெளியிடப்பட்ட தேதி

ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு (SPT) தனது இரண்டாவது விஜயத்தை 2026 ஜூன் 24 அன்று நிறைவு செய்தது. இவ்விஜயம் 2026 ஜூன் 15 முதல் 24 வரையில் அமைந்தது.

இவ்விஜயத்தின் போது​​ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவின் (SPT) நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவானதுவெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார ஆகியோரைச் சந்தித்தது. 2026 ஜூன் 15 அன்று நடைபெற்ற இச்சந்திப்பில்சித்திரவதைக்கு எதிரான அரசாங்கத்தின் துளியும் அனுமதிக்காத கொள்கையை இரு அமைச்சர்களும் எடுத்துரைத்தனர். மேலும்மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும்ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் மனப்பான்மையுடன் உடன்படிக்கை அமைப்புகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதற்கும் அரசாங்கத்தின் தீவிர ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

தனது ஆணையின் ஒரு பகுதியாகஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவானது (SPT), 2026 ஜூன் 15 அன்று வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் வைத்து, முக்கிய அமைச்சுகள்திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்தது. வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் இணைத்தலைமை தாங்கப்பட்ட இக்கூட்டத்தில்பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சுபாதுகாப்பு அமைச்சுசுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுபெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுகிராமிய  அபிவிருத்திசமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுசட்டமா அதிபர் திணைக்களம்இலங்கை போலீஸ்சிறைச்சாலைகள் திணைக்களம்நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம்குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபைமற்றும் புனர்வாழ்வுப் பணியகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கலந்தாய்வுகளில்சித்திரவதைத் தடுப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கையைத் திறம்படச் செயற்படுத்துவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியானநிர்வாக மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும்தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் விரிவாக விளக்கினர்.

இவ்விஜயத்தின் போது, ​​ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவின் (SPT) தூதுக்குழுவினர்சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையின் (OPCAT) கீழ் தேசிய தடுப்புப் பொறிமுறையாக (NPM) செயற்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் (HRCSL); நீதி சேவை ஆணைக்குழுவையும்மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.

விஜயத்தின் நிறைவாக 2026 ஜூன் 23 அன்று அரசாங்கப் பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில்ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவின் (SPT) (SPT) தூதுக்குழு தனது பூர்வாங்கக் கருத்துக்களை முன்வைத்தது. சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை சிறப்புப் பணிக்குழு ஏற்றுக்கொண்டதுடன்தடுப்புக்காவல் மையங்களுக்குத் தடையற்ற அணுகலை எளிதாக்கியதையும்விஜயம் முழுவதும் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ஒத்துழைப்பையும் பாராட்டியது.

ஐக்கிய நாடுகளுடனான தனது ஒத்துழைப்புக் கொள்கைக்கு இணங்கவும்தாமாக முன்வந்து மேற்கொண்ட உடன்படிக்கை அமைப்பின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலும்இலங்கையானதுதுணைக்குழுவுடன் வெளிப்படையானதும்ஆக்கப்பூர்வமானதும் மற்றும் ஒளிவுமறைவற்றதுமான முறையில் ஈடுபட்டது.

ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவின் (SPT) தூதுக்குழுவில்தூதுக்குழுத் தலைவரான ஆயிஷா ஷுஜுன் முஹம்மது (மாலத்தீவு)ஜேகப் ஜூலியன் செபெக் (போலந்து)அனிகா டோம்சிக் (க்ரோஏஷியா)மற்றும் நிகா க்வராட்ஸ்கெலியா (ஜோர்ஜியா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழுவின் (SPT) செயலகத்தின் அதிகாரிகளும் இத்தூதுக்குழுவுடன் வருகை தந்திருந்தனர்.

2017-டிசம்பரில் இலங்கை சித்திரவதை மற்றும் பிற கொடூரமானமனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் விதமான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து, 2019 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் பயணத்திற்குப் பிறகுஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு 

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

இலங்கை

2026, ஜூலை 1Bottom of Form

Show as Media Release on Homepage